» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாம்புகள், வெளவால் மூலம் கரோனா வைரஸ் பரவி இருக்கலாம்:சீன நிபுணர்கள் கருத்து

வியாழன் 23, ஜனவரி 2020 5:16:42 PM (IST)

சீனாவின் வுகான் நகரில் இருந்து சீனா முழுவதும் பரவி விட்ட கரோனா வைரஸ் முதலில் உணவாகப் பயன்படுத்தப்படும் பாம்புகள், வெளவால் மூலம் மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த கரோனா வைரஸ் மரபணு வரைபடத்தில் உள்ள பல பகுதிகள் நீர்ப் பாம்பு , மற்றும் வெளவால் மரபணு தொகுப்பில் உள்ள பல பகுதிகளுடன் ஒத்துப் போகின்றன என சீன நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் இது முடிவான கருத்து அல்ல. இன்னும் பல ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்கள். கரோனா வைரஸ் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வு கான் நகருக்கான எல்லா போக்கு வரத்துகளும் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியிலிருந்து நிறுத்தப்பட்டன, வு கான் நகருக்கு வெளியூர் மக்கள் வருவதும், வுகான் நகர மக்கள் மற்ற நகரங்களுக்கு செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. வுகான் நகரில் காயச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் முழுக்க தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory