» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நித்தியானந்தாவுக்கு எதிராக புளூ கார்னர் நோட்டீஸ் : இன்டர்போல் நடவடிக்கை

புதன் 22, ஜனவரி 2020 5:44:38 PM (IST)

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவுக்கு சர்வதேச விசாரணை அமைப்பான இன்டர்போல்  ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

சாமியார் நித்தியானந்தா மீது பலாத்காரம், ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதையடுத்து, அவரது பாஸ்போா்ட்டை மத்திய அரசு ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், 2018-ஆம் ஆண்டுடன் முடிவடைந்த பாஸ்போா்ட்டை புதுப்பிப்பதற்கு நித்தியானந்தா விண்ணப்பம் அளித்திருந்தாா். அவா் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அந்த விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், நித்தியானந்தாவுக்கு தாங்கள் அடைக்கலம் கொடுத்துள்ளதாக எழுந்த புகாரை  திட்டவட்டமாக மறுத்துள்ள ஈக்வடாா், ‘நித்தியானந்தாவுக்கு புகலிடம் எதுவும் அளிக்கவில்லை. மேலும், தென் அமெரிக்க பகுதிகளில் எந்த தீவுகளையும் வாங்க அவருக்கு ஈக்வடாா் அரசு உதவவில்லை’என்று தெரிவித்திருந்தது.  ஆனால், ஈக்வடார் அருகே உள்ள ஒரு கைலாசா என்ற தீவை சொந்தமாக வாங்கி, அங்கிருந்து ஆன்மிக சொற்பொழிவுகளை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில், சர்ச்சைக்குள்ளான நித்தியானந்தா இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டதாகவும், அவர் எங்கு உள்ளார் என்பது தெரியவில்லையும் என்றும், அவரது இருப்பிடத்தை கண்டறிய முடியாமல், கர்நாடகா போலீஸார் திணறி வருகின்றனர். கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து சித்ரவதை செய்தல் போன்ற குற்றங்களுக்காக நித்தியானந்தாவை தேடி வருவதாகவும், அவரின் இருப்பிடம் தெரியாத நிலையில், புளூ கார்னர் நோட்டீஸ் அளிக்க சர்வதேச புலனாய்வு அமைப்பான இண்டர்போலிடம் பெற்றுத் தருமாறு குஜராத் மாநில காவல்துறை முடிவு செய்து மாநில குற்றவியல் விசாரணை துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர். 

அதேசமயம் நித்தியானந்தாவை கண்டுபிடிக்க உயர்நீதிமன்றம் விதித்த கெடு முடிவடைந்த நிலையில், நித்தியானந்தாவுக்கு எதிராக புளூ கார்னர் நோட்டீஸ் வழங்கக் கோரி, தில்லி சிபிஐ - இண்டர்போல் அலுவலகத்திற்கு குஜராத் மாநில போலீஸார் கடிதம் எழுதி இருந்தனர்.அதை ஏற்று தற்போது நித்தியானந்தாவுக்கு சர்வதேச விசாரணை அமைப்பான இன்டர்போல்  ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.  குற்றத்தில் ஈடுபட்ட ஒரு நபர் இருக்கும் இடத்தை உறுப்பு நாடுகள் பகிர்ந்து கொள்வதற்கு புளூ கார்னர் நோட்டீஸ் கட்டாயமாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory