» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி விலகல்

ஞாயிறு 19, ஜனவரி 2020 10:20:38 PM (IST)பிரிட்டன் அரச குடும்ப உறுப்பினர் பொறுப்பில் இருந்து இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் விலகுவதாக, பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

உலகின் சக்திவாய்ந்த மற்றும் பாரம்பரியமான அரச குடும்பங்களில் பிரிட்டன் அரச குடும்பமும் ஒன்றாகும். இங்கிலாந்து அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் பதவியிலிருந்து விலகப் போவதாக இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகனும் கடந்த வாரம் தெரிவித்திருந்தனர். அரச பரம்பரைச் சொத்துகள் தங்களுக்கு வேண்டாம் என்றும் ஹாரி-மேகன் தம்பதியினர் கூறியிருந்தனர். இதுதொடர்பாக அரச குடும்பம் அதிருப்தியில் இருப்பதாகவும், தம்பதியினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகின.

பிரிட்டன் அரச குடும்ப உறுப்பினர் பொறுப்பில் இருந்து இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் விலகுவதாக, பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அரச குடும்பத்திலிருந்து ஹாரி-மேகன் வெளியேற சம்மதம் தெரிவித்தார் ராணி எலிசபெத்.எனவே ஹாரி-மேகன் தம்பதி இனி பிரிட்டன் அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் இல்லை எனவும், இனி அவர்கள் Royal Highness என்ற பட்டத்துடன் அழைக்கப்பட மாட்டார்கள் எனவும் பக்கிங்ஹாம் அரண்மனை தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து அரண்மனையிலிருந்து வெளியேறும் இளவரசர் ஹாரி கனடாவில் குடியேற திட்டமிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory