» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்த தடையுமில்லை: நமல் ராஜபக்சே

சனி 18, ஜனவரி 2020 4:54:51 PM (IST)

நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்த தடையுமில்லை என நமல் ராஜபக்சே தெரிவித்து உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இலங்கை நாட்டிற்கு செல்ல அவருக்கு இலங்கை அரசு விசா அனுமதி மறுத்து விட்டது என சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.  இந்நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே இது முற்றிலும் ஒரு வதந்தியாகும் என டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்தியாவின் மூத்த நடிகர் ரஜினிகாந்த் இலங்கை செல்வதற்கு, அவருக்கு விசா அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது என்ற செய்தியானது வதந்தி ஆகும். நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்த தடையுமில்லை, அது பற்றிய வதந்திகளில் எந்த உண்மையுமில்லை. இலங்கைவாசிகள் பலரை போன்று நானும், எனது தந்தையாரும் ரஜினிகாந்த் திரைப்படங்களின் பெரும் ரசிகர்கள். அவர் இலங்கை வர விரும்பினால் நிச்சயம் வரலாம், ஒரு தடையுமில்லை என நமல் ராஜபக்சே தெரிவித்து உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory