» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் தால் எரிமலைப் புகை சூழ்ந்தது: விமானங்கள் ரத்து.. பள்ளிகள் மூடல்!!

திங்கள் 13, ஜனவரி 2020 3:40:53 PM (IST)பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் தால் எரிமலைப் புகை சூழ்ந்துள்ளதால் விமான சேவை ரத்து செய்ய்பபட்டுள்ளது. 

பிலிப்பைன்ஸ் தால் ஏரிமலை சீற்றமடைந்து எரிமலை குழம்பு மற்றும் கடுமையான புகைக்க்கி வருகிறது, இந்தப் புகை மணிலா வரை பரவி வருகிறது. பிலிப்பைன்சில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள சுமார் 8000 கிராமவாசிகளை பாதுகாப்பான இடங்களுக்கு அரசு வெளியேற்றியது. 

படங்காஸ் மற்றும் அருகிலுள்ள கேவைட் மாகாணத்தில் 38 மையங்களில் வெளியேறிய மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் கடுமையான புகை வெளியேருவதால் அருகில் உள்ள மணிலாவின் சர்வதேச விமான நிலையம், அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் இன்று மூடப்பட்டன.தலைநகருக்கு தெற்கே தால் எரிமலை வெடித்ததால் உயிரிழப்புகள் அல்லது பெரிய சேதம் குறித்த இதுவரை எந்த அறிக்கைகள் வெளிவரவில்லை என அரசு தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory