» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மிஸ் யுனிவர்சாக தென் ஆப்பிரிக்க அழகி தேர்வு

திங்கள் 9, டிசம்பர் 2019 4:32:55 PM (IST)2019ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகியாக தென் ஆப்பிரிக்காவின் சோசிபினி துன்சி  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

அட்லாண்டாவில் நடந்த உலக அழகிகளுக்கான மிஸ் யுனிவர்ஸ் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி துன்சி (26), 2019ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸாக முடிசூட்டப்பட்டார். புவேர்ட்டோ ரிக்கோவின் மேடிசன் ஆண்டர்சன் ரன்னர்-அப் ஆகவும், மெக்ஸிகோவைச் சேர்ந்த சோபியா அரகன் மூன்றாவது இடத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இப்போட்டியில், இந்தியா சார்பில் 26 வயதான வர்திகா சிங்  கலந்துகொண்டார். ஆனால் அவரால் முதல் 10 இடங்களுக்குள் தகுதி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அழகு ராணியாக தேர்வு செய்யப்பட்ட சோசிபினி துன்சி முதலிடத்தை பெற்றார். ஏற்கனவே, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மார்கரெட் கார்டினர் மற்றும் டெமி-லே நெல்-பீட்டர்ஸ் ஆகியோர் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றுள்ளனர். சோசிபினி துன்சி, மூன்றாவது பட்டம் பெறும் தென்னாப்பிரிக்கர். சோசிபினி தேர்வு செய்யப்பட்டதால், அவர் உலகளவில் ட்விட்டரில் பிரபலமாகி, உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாக வலம் வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory