» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பெண் ஊழியருடன் உறவு: மெக்டொனால்ட்ஸ் நிறுவன தலைமை அதிகாரி பணி நீக்கம்

திங்கள் 4, நவம்பர் 2019 5:41:18 PM (IST)

பெண் ஊழியருடன் உறவு வைத்திருந்ததால், மெக்டொனால்ட்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ஸ்டீவ் ஈஸ்டர் ப்ரூக், அதிரடியாக அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டீவ் ஈஸ்டர் ப்ரூக் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பெண் ஊழியர் ஒருவருடன் உறவில் இருந்ததுதான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. எனினும், அந்த பெண்ணின் அடையாளத்தை அந்நிறுவனம் வெளியிடவில்லை. போர்ட் உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் ஈஸ்டர் ப்ரூக் வெளியேறிவிட்டார். இனி நிறுவனத்தின் செயல்பாடு, நிதி குறித்து அவருக்குத் தொடர்பில்லை என மெக்டொனால்ட்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ப்ரூக்கை நீக்கிய கையோடு அந்தப் பதவிக்கு புதிய நபரையும் அறிவித்தது மெக்டொனால்ட்ஸ்.மெக்டொனால்ட்ஸின் அமெரிக்க கிளைகளுக்கு பொறுப்பாளராக இருந்தவருமான கிறிஸ் கெம்ப்சின்ஸ்கி அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தான ஈஸ்டர் ப்ரூக் பெண் ஊழியருடனான உறவை ஒப்புக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், தனது உறவு, நிறுவனத்தின் கொள்கையை மீறும் வகையிலான ஒரு தவறு என்றும், நிறுவனம் எடுத்த இந்த முடிவுக்கு உடன்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory