» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தாய்லாந்து மொழியில் திருக்குறளை வெளியிட்டார் பிரதமர் நரேந்திரமோடி

சனி 2, நவம்பர் 2019 7:58:48 PM (IST)தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார் 

இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு தாய்லாந்தில் நாளையும், நாளை மறுநாளும் (நவ.3, 4)  நடைக்கிறது. இதைபோல 14-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு, 3வது பிராந்திய விரிவான கூட்டமைப்பு மாநாடும் தாய்லாந்தில் நடைபெறுகிறது. 

இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக  தனி விமானத்தில் இன்று தாய்லாந்து சென்றார்.  இன்று பிற்பகல் பாங்காக் விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தாய்லாந்தின் பயணத்தின் தொடக்க நிகழ்ச்சியாக தலைநகர் பாங்காக் நகரில் அமைந்துள்ள தேசிய உள்விளையாட்டு அரங்கில் இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர்,  தாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலையும் பிரதமர் மோடி வெளியிட்டார். பின்னர் தனது உரையை வணக்கம் என தொடங்கிய மோடி, பல்வேறு இந்திய மொழிகளில் வணக்கம் தெரிவித்தார். மோடி வணக்கம் தெரிவித்து பேச தொடங்கிய போது இந்தியர்கள் பலத்த கோஷங்களை எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory