» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பயங்கரவாதத்தை ஒருங்கிணைந்து ஒடுக்க வேண்டும்: ஷாங்காய் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேச்சு!!

சனி 2, நவம்பர் 2019 5:49:38 PM (IST)"பயங்கரவாதத்தை ஒருங்கிணைந்து ஒடுக்க வேண்டும்" என ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பேசிய இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உறுப்பு நாடுகளைக் கேட்டுக்கொண்டார்.

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் இந்தியா சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். மாநாட்டில் அவர் பேசியதாவது: பயங்கரவாத தாக்குதலால், வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. பயங்கரவாதம் சமூகங்களை தொடர்ந்து சீர்குலைக்கிறது. எனவே, எந்தவித இரட்டை கருத்துகளும் இன்றி, நமது வளர்ச்சியை மறைமுகமாக பாதிக்கும் பயங்கரவாதத்தை ஒருங்கிணைந்து ஒடுக்க வேண்டும். தற்போதுள்ள அனைத்து சர்வதேச சட்டங்களையும் வழிமுறைகளையும் வலுப்படுத்தி செயல்படுத்த வேண்டும். பயங்கரவாத அச்சுறுத்தலை சமாளிக்க ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நாடுகள் ஒன்றிணைவது முக்கியம்.

நட்பு நாடுகள் எளிதில் தொழில் தொடங்குவதற்கும் முதலீடு செய்வதற்கும் ஏற்ற சுமூகமான பொருளாதார சூழலை இந்தியா வழங்குவதற்கு தயாராக உள்ளது. நிலக்கரி சுரங்கம் மற்றும் ஒப்பந்த உற்பத்தியில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் வகையில் இந்தியா சமீபத்தில் அந்நிய நேரடி முதலீட்டு சீர்திருத்தங்களை அறிவித்தது. டிஜிட்டல் மீடியாவில் 26 சதவீத வெளிநாட்டு முதலீட்டுக்கும் ஒப்புதல் அளித்தது. இந்தியா  தனது லட்சிய திட்டமான மேக் இன் இந்தியா திட்டத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் உள்ள கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory