» செய்திகள் - விளையாட்டு » உலகம்

காஷ்மீர் மக்களுக்கு உதவும் நோக்கத்துடன் எல்லைப் பகுதியை கடக்க வேண்டாம் : பாக்.பிரதமர் இம்ரான்கான்

ஞாயிறு 6, அக்டோபர் 2019 12:18:18 PM (IST)

காஷ்மீர் மக்களுக்கு உதவும் நோக்கத்துடன் எல்லைப் பகுதியை கடக்க வேண்டாம் என்று ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் வாழும் பாகிஸ்தானியர்களை பிரதமர் இம்ரான்கான் எச்சரித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நீக்கப்பட்ட பின்னர் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியா உடனான தூதரக உறவை முறித்து கொண்ட பாகிஸ்தான், இந்திய தூதரை திருப்பி அனுப்பியது. காஷ்மீர் பிரச்னையை சர்வதேச பிரச்னையாக்க பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டது. ஆனால், இது இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை. பாகிஸ்தான் உண்மையை உணர வேண்டும்.

இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் என இந்தியா, பாகிஸ்தானை எச்சரித்தது. மேலும், இது தொடர்பாக பாகிஸ்தான் விடுக்கும் அறிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் இம்ரான்கான் தனது நேற்றைய டிவிட்டர் பதிவில், ஜம்மு காஷ்மீரில் நமது சகோதரர்கள் சந்திக்கும் அவஸ்தை, கஷ்டங்களை நினைத்து ஆக்ரமிப்பு காஷ்மீர் மக்கள் படும் வேதனையை அறிவேன். ஆனால் அவர்களுக்கு ஆதரவாக உதவி செய்யும் நோக்கத்துடன் நீங்கள் எல்லை பகுதியை கடந்தால், இந்திய ராணுவத்தினரால் சிறை பிடிக்கப்பட்டு துன்புற நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory