» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பஹ்ரைன் சிறையிலிருந்து 250 இந்தியர்கள் விடுதலை: பிரதமர் மோடி நன்றி

திங்கள் 26, ஆகஸ்ட் 2019 9:10:35 AM (IST)பிரதமர் மோடி, வருகையை தொடர்ந்து, நல்லெண்ண அடிப்படையில், பஹ்ரைன் சிறையில் இருந்து 250 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

5 நாட்கள் அரசுமுறைப் பயணமாக, பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக பிரான்ஸ் பயணத்தை முடித்து, ஐக்கிய அரசு எமிரேட்ஸ் நாடு சென்றார். இதையடுத்து, ஐக்கிய அரசு எமிரேட்ஸ் பயணத்தை முடித்த மோடி பக்ரைன் வந்தடைந்தார். பக்ரைன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலிஃபாவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப்பேசினார். அப்போது மறுமலர்ச்சியின் மன்னர் ஹமாத் எனப்படும் ஆணையை (The King Hamad Order of the Renaissance) பிரதமர் மோடிக்கு மன்னர் ஹமத் பின் இசா அல் கலிஃபா வழங்கி கவுரவித்தார்.

கோவிலைப் புதுப்பிக்க 42 லட்சம் டாலர்

மனாமா நகர் அரண்மணையில் அந்நாட்டு இளவரசர் கலிபா பின் சல்மானை சந்தித்துப்பேசினார். அப்போது இருதரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்புகளை தொடர்ந்து, மனாமா பகுதியில் உள்ள 200 வருட பழமையான ஸ்ரீநாத்ஜி கோவிலுக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தினார். பின்னர், அந்த கோவிலை புதுப்பிக்கும் பணிகளுக்காக 42 லட்சம் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளார். அதற்கான பணிகளை இன்று தொடங்கிவைத்துள்ளார். இதன்மூலம், தியான மண்டபம், இந்து திருமணங்கள் உள்ளிட்ட இதர நிகழ்ச்சிகளை நடத்தும் வசதிகள், கோவில் பிரகாரம் முழுவதும் இந்திய மற்றும் பக்ரைன் கலைஞர்களால் வரையப்பட்ட ஓவியங்கள் உள்ளிட்டவை அங்கு பிரதிபலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையிலிருந்து 250 இந்தியர்கள் விடுதலை:

வெளிநாடுகளில் 8,189 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சவுதியில் 1,811 இந்தியர்களும், ஐக்கிய அரபு எமீரேட்சில் 1,392 இந்தியர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி, வருகையை தொடர்ந்து, நல்லெண்ண அடிப்படையில், பஹ்ரைன் சிறையில் இருந்து 250 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

பஹ்ரைன் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவு: மனித நேய அடிப்படையில், பஹ்ரைன் அரசு, அந்நாட்டு சிறையில் உள்ள 250 இந்திய கைதிகளை விடுதலை செய்துள்ளது. இதற்காக பஹ்ரைன் அரசுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். முக்கியமாக பஹ்ரைன் அரசு, அவரது குடும்பத்திற்கு, மனித நேய நடவடிக்கைக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory