» செய்திகள் - விளையாட்டு » உலகம்

காஷ்மீர் விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுகிறது இந்தியா: பாகிஸ்தான் அதிபர் குற்றச்சாட்டு

ஞாயிறு 25, ஆகஸ்ட் 2019 9:46:21 PM (IST)

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடுவதாக பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி  கூறியுள்ளார்.

ஆல்வி வைஸ் நியூஸ் என்ற கனடா-அமெரிக்க ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பாகிஸ்தான் அதிபர் ஆரிப் கூறிய கருத்துகள் விவரம்: ,”ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பிரிவுகளை அரசியலமைப்பில் இருந்து நீக்கிவிட்டதால் அங்கு நிலைமை மேம்படும் என்று இந்தியா நினைத்தால், இந்திய அரசாங்கம் முட்டாள்களின் சொர்க்கத்தில் வசித்து வருகிறது என்று அர்த்தம். இந்த விவகாரத்தில் அரசியலமைப்பு மாற்றங்களை மேற்கொண்டு இந்தியா உண்மையில் தீவிரவாதத்தினை ஊக்குவித்துள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடி வருகிறது”

நீண்ட காலத்திற்கு பின் இந்த விவகாரம் சர்வதேச அளவிற்கு சென்றுள்ளது. பாதுகாப்பு கவுன்சிலின் எண்ணற்ற தீர்மானங்களை இந்தியா தவிர்த்துவிட்டது. இந்த விவகாரம் சுமுக முறையில் தீர்க்கப்பட பாகிஸ்தானுடன் அமர்ந்து பேசுவதற்கும் இந்தியா மறுத்துவிட்டது””பாகிஸ்தானுக்கு எதிராக புல்வாமா போன்ற தாக்குதல்களை இந்தியா நடத்த கூடிய சாத்தியம் உள்ளது. ஆனால், போரை தொடங்க பாகிஸ்தான் விரும்பவில்லை. இந்தியா போரை தொடங்கினால், எங்களை தற்காத்து கொள்வதென்பது எங்களது உரிமை” இவ்வாறு  பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி பேட்டியில் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory