» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகம் அருகே குண்டு வெடிப்பு: 12பேர்... 100பேர் படுகாயம்!!

சனி 20, ஜூலை 2019 3:50:39 PM (IST)ஆப்கானில் காபூல் பல்கலைக்கழகம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள காபூல் பல்கலைக்கழகத்துக்கு வெளியே தேர்வுக்காக மாணவர்கள் வெள்ளிக்கிழமை காத்திருந்தனர். அப்போது பல்கலைக்கழகத்துக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் குண்டு வெடித்தது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. அங்கு தலிபான் பயங்கரவாதிகள் பல இடங்களைக் கைப்பற்றி கடந்த 17ஆண்டுகளாக தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். 

அதுமட்டுமன்றி, அந்நாட்டின் பாதுகாப்புப் படையினர் மீதும் அவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்நாட்டில் தற்போது ஐ.எஸ் சர்வதேச பயங்கரவாதிகளின் ஊடுருவலும் அதிகரித்து வருகிறது. தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஆப்கன் அரசு ஈடுபட்டு வருகிறது. எனினும் இதுவரை எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory