» செய்திகள் - விளையாட்டு » உலகம்

விஜய் மல்லையாவை நாடுகடத்தும் உத்தரவுக்கு எதிரான மனு மீது அடுத்த ஆண்டு விசாரணை

வெள்ளி 19, ஜூலை 2019 10:21:39 AM (IST)

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு நடைபெறும் என்று இங்கிலாந்து நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டார். அவருக்கு எதிராக சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் வழக்குப் பதிவு செய்துள்ளன. இந்தியா அளித்த புகாரின்பேரில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், அவரை லண்டனில் போலீசார் கைது செய்தனர். அவர் உடனே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

விஜய் மல்லையாவை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி, லண்டன் நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிபதி விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கினார். இந்த உத்தரவுக்கு இங்கிலாந்து உள்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்தார். உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய அனுமதி கோரி, லண்டன் ராயல் கோர்ட்டில் விஜய் மல்லையா மனு தாக்கல் செய்தார். மேல்முறையீடு செய்ய அனுமதி அளித்து, கடந்த 2-ந் தேதி 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து ஐகோர்ட்டில் விஜய் மல்லையா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

அந்த மனுவில், தான் ஆளும் தரப்பினரால் அரசியல்ரீதியாக பழிவாங்கப்படுவதாகவும், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய பணத்தை அளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில், விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு எப்போது விசாரணைக்கு வரும் என்பதை இங்கிலாந்து உயர்நீதிமன்றம் நேற்று அறிவித்தது. அதன்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி 11-ந் தேதி இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் மனு விசாரணைக்கு வருகிறது. 3 நாட்கள் விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory