» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவுக்கு மர்ம நபர் தீவைப்பு; 13 பேர் பலி - 35பேர் படுகாயம்!!

வியாழன் 18, ஜூலை 2019 4:18:33 PM (IST)ஜப்பான் க்யோட்டா நகரில் உள்ள அனிமேஷன் ஸ்டூடியோவுக்கு மர்ம நபர் ஒருவர் தீ வைத்ததில் 13 பேர் உயிரிழந்தனர்.

ஜப்பான் க்யோட்டா நகரில் 3 தளங்கள் கொண்ட அனிமேஷன் ஸ்டூடியோவில் இன்று காலை 10.30 மணி அளவில் மர்ம நபர் கட்டிடத்தை சுற்றி பெட்ரோல் போன்ற திரவத்தினை ஊற்றி தீ வைத்துள்ளார். இதையடுத்து அந்த கட்டிடம் சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்தது. கொழுந்து விட்டெரியும் தீ காரணமாக வானளாவிய உயரத்துக்கு புகை வானில் உயர்ந்து பரவியுள்ள காட்சிகளும் பதிவாகியுள்ளன. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கட்டிடத்தில் தீ வைக்கப்பட்டபோது கட்டிடத்திற்குள் 70 பேருக்கும் மேற்பட்டோர் பணி செயதுள்ளனர். தீ மளமளவென பரவியதில் கட்டிடம் முழுவதும் எரிந்துள்ளது. தீ விபத்தில்  சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். 35 பேர் படுகாயமடைந்தனர். அதில் 10 பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் கட்டிடத்துக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இச்சம்பவம் தொடர்பாக க்யோட்டோ நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory