» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மது பாட்டிலில் மகாத்மா காந்தியின் புகைப்படம்: இஸ்ரேல் நிறுவனம் மன்னிப்பு கோரியது

புதன் 3, ஜூலை 2019 5:25:38 PM (IST)மது பாட்டில்களில் மகாத்மா காந்தியின் படத்தை வைத்து சர்ச்சையைக் கிளப்பிய இஸ்ரேலிய மது உற்பத்தி நிறுவனம் இந்திய மக்களிடம் மன்னிப்பு கோரியது.

இஸ்ரேலிய நிறுவனத்தின் மது பாட்டில்கள் மீது காந்தியின் படம் பொறித்திருப்பது குறித்து இந்தியாவின் மாநிலங்களவை எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை கவலை தெரிவித்தனர். இப்பிரச்சினையை ஆராய்ந்து உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களவைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு வெளிவிவகாரத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் இன்று சம்பந்தப்பட்ட பீர் கம்பெனி பிராண்ட் மேலாளர் கிலாட் ட்ரார், நிறுவனம் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: "மல்கா பீர் நிறுவனம் இந்திய மக்களிடமும் இந்திய அரசிடமும் அவர்களின் உணர்வைப் புண்படுத்தியதற்காக தனது மனமார்ந்த மன்னிப்பைக் கோருகிறது. மகாத்மா காந்தியை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். அவரது படத்தை எங்கள் மது பாட்டில்களில் பொறித்தமைக்காக நாங்கள் வருந்துகிறோம். இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகம் இந்தப் பிரச்சினையை எழுப்பியவுடன், உற்பத்தி மற்றும் பாட்டில் விநியோகத்தை நிறுத்திக் கொள்கிறது. 

மேலும், இப்போது சந்தையில் விற்பனைக்கு அனுப்பப்பட்ட பாட்டில்களையும் திரும்பப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மூன்று முன்னாள் பிரதமர்களை உள்ளடக்கிய வரையறுக்கப்பட்ட பதிப்பு பாட்டில்களில்  டேவிட் பென்-குரியன், கோல்டா மீர் மற்றும்  மெனாச்செம் பேகின்,  சியோனிசத்தின் தந்தை என்றழைக்கப்படும் தியோடர் ஹெர்ஸ்ல் தவிர, வரையறுக்கப்பட்ட பதிப்பு பாட்டில்களில் இடம்பெறும் ஐந்தாவது முக்கிய நபராக காந்தி இருந்தார். உண்மையில் மகாத்மா காந்தியைக் கவுரவிப்பதே எங்கள் நோக்கம், இஸ்ரேலியர் அல்லாத ஒரே முகம் மகாத்மா காந்தியுடையதுதான்.இவ்வாறு கிலாட் ட்ரார் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய அதிகாரிகளிடம் நேரில் பேசிய கிலாட் ட்ரார், எதிர்காலத்தில் இதுபோன்ற பிழைகள் ஏற்படாவண்ணம் மக்களின் உணர்வுகளை மனதில் வைத்துச் செயல்படுவோம் என்று உறுதியளித்துள்ளார். இஸ்ரேலின் 71-வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் ஒரு பெட்டித் தொகுப்பில் சர்ச்சைக்குரிய பாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பில் பல்வேறு வகையான பீர் பற்றிய ஐந்து வரலாற்றுத் தலைவர்கள் இடம் பெற்றிருந்தனர். நிழல்கோடுகளிடையே,  அலங்கரிக்கப்பட்ட டி ஷர்ட் அணிந்த காந்தியின் கார்ட்டூன் படமும் அதில் இடம் பெற்றிருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory