» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நெருப்புடன் விளையாட வேண்டாம் : ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை

செவ்வாய் 2, ஜூலை 2019 12:57:18 PM (IST)

யுரேனிய கையிருப்பை ஈரான் அதிகரித்துள்ள நிலையில், நெருப்புடன் விளையாட வேண்டாம் என அந்நாட்டை அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா விதித்த தடைகளை மீறி எண்ணெய் வர்த்தகத்தை மேற்கொள்ள ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் உதவவில்லை என்றால், ஒப்பந்தப்படி அனுமதிக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை அதிகரிப்பதைத் தவிர வேறுவழியில்லை என்று ஈரான் கூறியிருந்தது. 2015 அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ், அனுமதிக்கப்பட்டதை விட மேம்படுத்தப்பட்ட யுரேனியத்தை அதிகாரிப்பதாக ஈரான் நேற்று அறிவித்தது.

ஐ.நா-வின் அணுசக்தி கண்காணிப்புக் குழு, 2015 ஒப்பந்தத்தின் கீழ் ஈரானின் அணுசக்தி திட்டத்தை கண்காணிக்கும் சர்வதேச அணுசக்தி நிறுவனம், ஈரான் வரம்பை மீறியதாக உறுதிப்படுத்தியது. 300 கிலோகிராம் என்ற அளவைத் தாண்டி, செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை அதிகரித்திருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் மேலும் மீறிச்செல்ல வேண்டாம் என பிரிட்டன் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்கா கொடுத்த நெருக்கடியின் விளைவாகவே, ஒப்பந்தம் சிதையும் நிலை ஏற்பட்டிருப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

இதனிடையே, ஈரானின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் நெருப்புடன் விளையாடுவதாகவும், என்ன செய்கிறோம் என தெரிந்துதான் ஈரான் இதைச் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். உலக சக்திகளுடனான 2015 அணுசக்தி ஒப்பந்த வரம்பை ஈரான் மீறியதாக, ஐ.நா உறுதி செய்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர்  டிரம்ப், ஈரானுக்கு மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்த அமெரிக்கா அதிபரிடம்  கருத்து கேட்டபோது, ஈரானுக்கு எந்த செய்தியும் இல்லை. அவர்கள் என்ன செய்கிறார்கள் என அவர்களுக்கு நன்றாக தெரியும். அவர்கள் யாருடன் விளையாடுகிறார்கள் என்பதும் தெரியும். அவர்கள் நெருப்புடன் விளையாடுகிறார்கள் என்று நினைக்கிறேன். எனவே, ஈரானுக்கு எந்த செய்தியும் இல்லை என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory