» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் கட்டுப்பாட்டை இழந்து கட்டிடத்தில் மோதிய விமானம்- 10 பேர் உயிரிழப்பு!!

திங்கள் 1, ஜூலை 2019 12:01:59 PM (IST)அமெரிக்காவின் டல்லாஸ் அருகே விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம், கட்டுப்பாட்டை இழந்து கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், டல்லாஸ் அருகே உள்ள அடிசன் விமான நிலையத்தில் இருந்து, நேற்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதிக்கு ஒரு விமானம் புறப்பட்டது. இரட்டை எஞ்சின் கொண்ட அந்த சிறிய ரக விமானம், ரன்வேயில் ஓடி மேலே எழும்ப முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து இடதுபுறம் திரும்பி, விமான நிலைய ஹேங்கர் மீது மோதியது. பின்னர் சிறிது தொலைவு சென்று தரையில் விழுந்து தீப்பிடித்தது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 10 பேரும் பலியாகினர். விமானம் மோதியதால் ஹேங்கர் கட்டிடத்தில் மிகப்பெரிய ஓட்டை விழுந்ததுடன், கட்டிடமும் தீப்பிடித்தது. அந்த கட்டிடத்தில் ஆட்கள் யாரும் இல்லாததால் அங்கு உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு மத்திய விமான போக்குவரத்து நிர்வாக அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். விமானம் தரையில் விழுந்து தீப்பிடிக்கும் வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory