» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஈரான் விவகாரத்தில் எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை: ஜப்பானில் டிரம்ப் பேச்சு

வெள்ளி 28, ஜூன் 2019 10:45:58 AM (IST)

ஈரான் விவகாரத்தில் எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டில் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, அந்த ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அவர் மீண்டும் அமல்படுத்தினார். அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்களால் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்த சூழலில், அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் கடந்த வாரம் சுட்டு வீழ்த்தியது.

அதற்குப் பதிலடியாக ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவிட்டு, பிறகு அந்த உத்தரவை பிறகு  வாபஸ் பெற்றார். எனினும், ஈரான் மதத் தலைவர் அயதுல்லா கமேனி,  வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஷரீஃப் மற்றும் அந்த நாட்டு ராணுவ உயரதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்தது. இந்தத் தடைகள் மூலம் சமாதானப் பேச்சுவார்த்தைக்கான பாதையை அமெரிக்கா அடைத்துவிட்டதாக ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானி சாடியிருந்தார். ஈரான் அணுஆயுதத் திட்டத்துக்கு பயன்படுத்தும் கணினிகளை அமெரிக்க ராணுவ இணையதள வல்லுநர்கள் முடக்கி வருகின்றனர். இதனால், அந்நாடு தொடர்ந்து அணுஆயுதத் தயாரிப்பில் ஈடுபட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் அணுஆயுதத் திட்டங்கள் மட்டுமல்லாது அந்நாட்டின் ஏவுகணைகள், ராக்கெட்டுகள் உள்ளிட்டவையும் முடக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. 

ஈரானுடன் போர் ஏற்படாது என்றே நான் நம்புகிறேன். அப்படி ஒரு போர் ஏற்பட்டால், அமெரிக்கா எளிதில் வெற்றி பெற்றுவிடும். காரணம், ஈரானைவிட அமெரிக்கா மிகவும் வலிமை வாய்ந்தது. இந்தப் போரில் அமெரிக்காவின் நிலை மிக வலுவானதாக இருக்கும். எனவே, மிகக் குறுகிய காலத்தில் அந்தப் போர் நிறைவடைந்துவிடும். அதற்காக, அமெரிக்க ராணுவ வீரர்களை ஈரானுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இருக்காது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார். இந்நிலையில், ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்த டிரம்ப் இன்று கூறியதாவது: ஈரான் விவகாரத்தில் நான் கடந்த 3 தினங்களாக கூறிவருவது தான் எனது நிலைப்பாடு. இதில் போதிய கால அவகாசம் உள்ளதால் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டியதில்லை. அனைத்தும் சுமூகமாக முடியும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory