» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கைக்கு சமூக வலை தளங்களை கண்காணிக்கும் நவீன தொழில்நுட்ப உதவி வழங்ககுகிறது சீனா!!

வியாழன் 16, மே 2019 3:57:22 PM (IST)இலங்கையில் ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதலையடுத்து முதல் வெளிநாட்டு பயணமாக இலங்கை அதிபர் சிறிசேனா சீனாவுக்கு சென்று வந்துள்ளார். 

சிறிசேனாவின் சீன பயணத்தின் மூலம் இலங்கைக்குள் சீனாவின் கை மீண்டும் ஓங்கியிருப்பதாக சர்வதேச நோக்கர்கள் கருதுகிறார்கள். கடந்த 13ஆம் தேதி சீனா சென்றடைந்தார் இலங்கை அதிபர். அங்கு சீன அதிபர், சீனப் பிரதமர் ஆகியோருடன் சந்திப்புகளை நடத்தியுள்ளார். மேலும் ஆசிய கலாச்சாரங்கள் பற்றிய மாநாட்டிலும் கலந்து கொண்டு உரையாற்றினார் சிறிசேனா. இந்தப் பயணத்தின் முக்கிய அங்கமாக சீன அதிபர் சி ஜின்பிங் - சிறிசேனா சந்திப்பு நடைபெற்றது. அப்போது பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொள்ள இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் சீனா செய்து தரும் என்று இலங்கை அதிபர் உறுதியளித்துள்ளார். 

மேலும் இலங்கை பாதுகாப்புத் துறை மேம்பாட்டுக்காக சிறிசேனாவின் கோரிக்கைக்கிணங்க 260 கோடி ரூபாய் நிதி உதவியையும் இலங்கைக்கு சீனா வழங்கியுள்ளது. அதோடு இலங்கையிலுள்ள 100 போலீஸ் நிலையம் ஒவ்வொன்றுக்கும் நவீன ரக ஜீப்புகளை இலங்கை வழங்கியிருக்கிறது. . ஏற்கனவே எட்டாம் தேதி முதல் கட்டமாக எட்டு நவீன ஜீப்புகளை இலங்கைக்கான சீனத் தூதர் இலங்கை அதிபரிடம் வழங்கியிருந்தார். இந்த பயணத்தின்போது, "சமூக வலைத்தளங்களின் ஊடாக போலிப் பிரசாரங்களை பரப்பி மறைந்திருந்து பயங்கரவாதத்தை விதைக்கும் நபர்களையும் குற்றவாளிகளையும் கண்டறிவதற்கும் அந்த அக்குற்றங்களை தடுப்பதற்கு தேவையான தொழில்நுட்ப உபகரணங்களும் அறிவும் இலங்கையிடம் இல்லை” என தெரிவித்தார் இலங்கை அதிபர்.

இதையடுத்து சமூக வலை தளங்களை கண்காணிக்கும் நவீன உபகரணங்களையும் தொழில்நுட்பத்தையும் இலங்கைக்கு வழங்குவதற்கு சீனா சம்மத்தித்துள்ளது. இது தொடர்பாக சீன தொழிநுட்ப குழுவொன்றை இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார் சீன அதிபர். சீன நிதியுதவியின் கீழ் இலங்கையின் பொலன்னறுவையில் கட்டப்பட்டு வரும் சிறுநீரக மருத்துவமனை பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்பின்போது இலங்கையை சீனாவின் சிறந்த நண்பன் என்று பாராட்டியிருக்கிறார் சீன அதிபர். இலங்கை அதிபரின் சீன பயணம் அது தொடர்பான முன்னெடுப்புகள் தொடர்பாக இந்தியா கவனித்து வருவதாக தெரிகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory