» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு எண்ணெய் இறக்குமதி பற்றி முடிவு: ஈரானிடம் இந்தியா உறுதி?

புதன் 15, மே 2019 10:27:00 AM (IST)

ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது தொடர்பாக, தேர்தலுக்கு பின்னர் முடிவு செய்யப்படும் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரிடம் இந்தியா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஈரானிடம் இருந்து அதிக அளவு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடாக இந்தியா இருந்து வந்தது.  இதற்கிடையில், அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா கடந்த ஆண்டு அறிவித்தது முதல், ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை டிரம்ப் நிர்வாகம் விதித்து வருகிறது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய அளித்த சலுகைகளையும் கடந்த 1 ஆம் தேதியோடு அமெரிக்கா ரத்து செய்தது. 

இதனால், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்த இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளன. இந்த சூழலில், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் ஷாரீப், இரண்டு நாள்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகை தந்தார்.  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்ஜை சந்தித்து ஜாவத் ஷாரீப் பேசினார்.  இந்த சந்திப்பின் போது,   ஈரானிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது குறித்து தேர்தலுக்கு பின்னர் முடிவு செய்யப்படும். இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று சுஷ்மா சுவராஜ் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory