» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாதிரியாகள் மீதான பாலியல் புகார்களை விசாரிக்கும் வழிமுறை : போப் பிரான்சிஸ் புதிய ஆணை!!

சனி 11, மே 2019 12:50:22 PM (IST)

கத்தோலிக்க பாதிரியாகள் மீதான பாலியல் குற்றங்களை விசாரிக்கும் வழிமுறைகள் தொடர்பாக போப் பிரான்சிஸ் புதிய ஆணை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

ஆஸ்திரேலியா, சிலி, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள கத்தோலிக்க பாதிரியார்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் உலக அளவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பாதிரியார்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது போப் ஆண்டவருக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. எனவே பாதிரியார்களின் இத்தகைய பாலியல் குற்றங்களை விசாரிக்கும் வகையில் புதிய ஆணை ஒன்றை போப் பிரான்சிஸ் வெளியிட்டு உள்ளார். 

அதன்படி உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க மறைமாவட்டங்கள் ஒவ்வொன்றிலும், பாதிரியார்களின் பாலியல் குற்றங்களை விசாரிக்கும் வழிமுறை ஒன்றை அடுத்த ஆண்டு (2020) ஜூன் மாதத்துக்குள் உருவாக்க வேண்டும். மேலும் பாதிரியார்களின் பாலியல் சுரண்டல் குறித்து யாரும் அறிந்தாலோ அல்லது சந்தேகம் ஏற்பட்டாலோ உடனடியாக அவருக்கு உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்களிடம் புகார் செய்ய வேண்டும் எனவும் போப் பிரான்சிஸ் தனது ஆணையில் குறிப்பிட்டு உள்ளார். கடந்த கால கசப்பான அனுபவங்களில் இருந்து பாடம் கற்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory