» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியா பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது: பாகிஸ்தான் ஜனாதிபதி குற்றச்சாட்டு

வெள்ளி 26, ஏப்ரல் 2019 10:58:26 AM (IST)

இந்தியா பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது என்று பாகிஸ்தான் ஜனாதிபதி கூறியுள்ளார். 

கா‌‌ஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் துணை ராணுவப்படை வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அதற்கு பதிலடியாக, பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானங்கள் அதிரடி தாக்குதல் நடத்தின. அதற்கு எதிர்வினையாக பாகிஸ்தான் விமானங்கள், இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றபோது விரட்டி அடிக்கப்பட்டன. இந்த சம்பவங்களால் இரு நாடுகளிடையே பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஒரு பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் அந்நாட்டு ஜனாதிபதி ஆரிப் ஆல்வி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் குறித்து குறிப்பிட்டார். அவர் பேசியதாவது: இந்தியாவை நாம் அணுகுகிற முறையில் இருந்தே நாம் அமைதியை நேசிப்பவர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். அடிப்படைவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் பாடுபட்டு வருகிறது. ஆனால் இந்தியாவோ, இந்த பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறது.இந்தியாவின் அணுகுமுறை ஏமாற்றம் அளிக்கிறது. பாகிஸ்தான், கடுமையான உள்நாட்டு பிரச்சினைகளை எதிர்கொண்டது. அதைக் கடந்து ஸ்திரத்தன்மை நோக்கி நகர்ந்து வருகிறது என்று கூறினார். 


மக்கள் கருத்து

சாமிApr 26, 2019 - 11:39:53 AM | Posted IP 172.6*****

அடி வாங்கிய பிறகுதானே அலற ஆரம்பித்து உளற ஆரம்பித்து இருக்கிறாய்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory