» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அரசியல் லாபத்துக்காக இந்திய பிரதமர் மோடி பொய் பேசுவது துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான் கண்டனம்

செவ்வாய் 23, ஏப்ரல் 2019 12:20:06 PM (IST)

அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், பார்மரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசுகையில், இந்தியாவை ஒருநேரத்தில் பாகிஸ்தான் அச்சுறுத்திவந்த காலம் இருந்தது. எங்களிடம் அணு ஆயுதம் இருக்கிறது, அணு ஆயுத பட்டனை அழுத்தி தாக்கிவிடுவோம் என்று கூறியது, இதையே பல்வேறு அதிகாரிகளும் அரசிடம் கூறி வந்தார்கள். நான் கேட்கிறேன், நம்மிடம் இப்போது என்ன இருக்கிறது, நம்மிடம் இருக்கும் அணு ஆயுதங்களை தீபாவளிக்கு வெடிக்கவா வைத்திருக்கிறோம்.

இந்திய விமானப்படை வீரர் கேப்டன் அபிநந்தன், பாகிஸ்தானில் பிடிபட்டபோது, அவரை மீட்க, பிரதமர் மோடி, 12 ஏவுகணைகளை தயாராக வைத்துள்ளதாக, அமெரிக்க மூத்த அதிகாரி பாகிஸ்தானிடம் தெரிவித்தார்” என்று மோடி பேசினார்.  பிரதமர் மோடியின்  இந்த பேச்சு, சற்றும் எதிர்பாராதது. அரசியல் லாபத்துக்காக இப்படியெல்லாம் பொய் பேசுவது துரதிஷ்டவசமானது, பொறுப்பற்றது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிSep 9, 1556 - 09:30:00 AM | Posted IP 162.1*****

மோடி என்ற சொல்லை அகராதியில் தேடினால் பொய் என்று போடும் காலம் விரைவில் வரும்

உண்மைApr 24, 2019 - 12:18:56 PM | Posted IP 141.1*****

இம்ரான் மண்டை பத்ரம்!

சாமிApr 23, 2019 - 06:25:27 PM | Posted IP 172.6*****

தம்பி கான் - அவர் சொல்வது உண்மை - நீ பிபிசி செய்திகளை பாரு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory