» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் காய்கறி மார்க்கெட்டில் பயங்கர குண்டு வெடிப்பு : 16 பேர் பலி

வெள்ளி 12, ஏப்ரல் 2019 4:36:40 PM (IST)



பாகிஸ்தானில் உள்ள மார்க்கெட்டில் இன்று காலை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாநிலத்தின் தலைநகரான குவெட்டாவில் ஹசார்கஞ்சி எனும் பகுதி உள்ளது. இங்கு ஹசாரா இனமக்கள் அதிக அளவில் உள்ளனர். இங்குள்ள காய்கறி மார்க்கெட்டில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே அங்கு கூடியிருந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர். இச்சம்பவத்தில் 16 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர். 

மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். குண்டுவெடிப்பில் அங்கிருந்த பல கடைகள், கட்டிடங்கள் இடிந்து சேதம் அடைந்தன. மார்க்கெட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நொறுங்கின. தகவல் அறிந்ததும் ராணுவத்தினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். இந்நிலையில் இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து

நிஹாApr 13, 2019 - 11:11:52 AM | Posted IP 162.1*****

தன்வினை தன்னை சுடும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory