» செய்திகள் - விளையாட்டு » உலகம்

போர்க்குற்றம் தொடர்பான விசாரணைக்கு தயாராக உள்ளோம் : இலங்கை ராணுவ தளபதி

செவ்வாய் 19, மார்ச் 2019 5:18:04 PM (IST)

போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு மீதான எத்தகைய விசாரணையையும் சந்திக்க தயார் என இலங்கை ராணுவ தளபதி மகேஷ் சேனநாயகா வெலிகாமா கூறியுள்ளார். 

கடந்த 2009-ம் ஆண்டு, விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரில் அப்பாவி தமிழர்களை கொன்று போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக இலங்கை ராணுவம் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இலங்கை ராணுவ தளபதி மகேஷ் சேனநாயகா வெலிகாமா நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது: எத்தகைய விசாரணையையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். அதற்கு நாங்கள் அச்சப்படவில்லை. ஏனென்றால் நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை. சர்வதேச விசாரணை தேவையில்லை. நமது நீதித்துறையே விசாரணை நடத்தலாம்.அப்பாவி மக்கள் உயிரிழப்பு இல்லாமல் எந்த போரும் நடக்காது. இது கடினமான உண்மை. அதற்காக நாங்கள் அப்பாவி மக்களை கொன்றோம் என்று அர்த்தம் அல்ல. பழையதை தோண்டாதீர்கள். கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் செய்த ஆக்கப்பூர்வ செயல்களை பாருங்கள். இவ்வாறு அவர் கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory