» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தோனேசியாவில் கனமழை, வெள்ளம் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆக உயர்வு

திங்கள் 18, மார்ச் 2019 5:02:36 PM (IST)இந்தோனேசியாவில்  கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பப்புவா மாகாணத்தில் நேற்று முன்தினம் கனமழை கொட்டித்தீர்த்தது. இடைவிடாது பெய்த மழையால் நீர்நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் தலைநகர் ஜெயபூரா மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் வெள்ளக்காடாகின. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. கனமழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

சாலைகளில் பாறைகள் உருண்டு விழுந்ததாலும், மரங்கள் வேரோடு சாய்ந்ததாலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அத்துடன் மின் இணைப்பு மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 63 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் 60 பேர் பலத்த காயம் அடைந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் சுலாவேசி மாகாணத்தில் கனமழை, வெள்ளம் மற்றும் அதனை தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டதில் 70 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory