» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நியூசிலாந்து துப்பாக்கிச்சூட்டில் 6பேர் பலி: வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் நூலிழையில் தப்பினர்!!

வெள்ளி 15, மார்ச் 2019 10:45:44 AM (IST)



நியூசிலாந்தில் மசூதி அருகே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 6பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் வங்கதேச கிரிக்கெட் வீர்ரகள் நூலிழையில் உயிர்தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

நியூசிலாந்து நாட்டில், கிறிஸ்ட்சர்ச்சில் நகரில், ஹாக்லே பூங்கா அருகே உள்ள மஸ்ஜித் அல் நூர் என்ற புகழ்பெற்ற மசூதி உள்ளது. இதன் அருகே மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்திருப்பதாகவும், ஏராளமானோர் காயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் வீரர்கள், கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள மஸ்ஜித் அல் நூர் மசூதியில் தொழுகை நடத்த சென்றபோது அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருந்து நூலிழையில் அனைவரும் உயிர்தப்பினர். கிறிஸ்ட்சர்ச் துப்பாக்குச்சூடு காரணமாக நாளை தொடங்கவிருந்த நியூசிலாந்து - வங்கதேசம் இடையேயான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory