» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்க டிவி இசை நிகழ்ச்சியில் தமிழ்ச் சிறுவன் முதலிடம்: ரூ.7 கோடி பரிசு வென்று அசத்தல் !

வியாழன் 14, மார்ச் 2019 5:26:15 PM (IST)



அமெரிக்காவின் டிவி இசை நிகழ்ச்சியில் 13 வயது தமிழ்ச் சிறுவன் லிடியன் முதலிடம் பிடித்து ரூ.7 கோடி பரிசுத்தொகையை வென்றான்.

சிபிஎஸ் தொலைக்காட்சியில் நேற்று ஒளிபரப்பான தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் என்கிற இசை நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் லிடியன் வெற்றி பெற்று சாம்பியன் ஆகியுள்ளார். இதன் மூலம் கிட்டத்தட்ட ரூ. 6 கோடியே 96 லட்சம் பரிசுத் தொகையை வென்றுள்ளார். இறுதிச்சுற்றில் தென் கொரியாவின் குக்கிவோனை அவர் தோற்கடித்தார். 2 வயது முதல் டிரம்ஸ் வாசிக்கத் தொடங்கிய லிடியன், தற்போது மொசார்ட், பீதோவன் ஆகியோரின் இசைக் குறிப்புகளை பியானோவில் நன்கு வாசிக்கும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றுள்ளார். 

அவரால் தற்போது 14 இசைக்கருவிகளை வாசிக்கமுடியும். பல நாடுகளில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இந்தச் சிறுவயதில் பல சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார். நேரடியாகப் பள்ளிக்குச் செல்லாமல் 1-ம் வகுப்பு முதல் நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங் வழியாகக் கல்வி கற்று வருகிறார். இவருடைய அக்கா அமிர்த் வர்ஷினியும் இசைக்கலைஞர். அவரும் பள்ளிக்குச் செல்லாமல் ஓபன் ஸ்கூலிங் வழியாகத் தற்போது +2 தேர்வை எழுதவுள்ளார். லிடியனின் தந்தை வர்ஷன் சதீஷ் இசையமைப்பாளராக உள்ளார். லிடியனின் இந்தச் சாதனைக்குத் தமிழ்த் திரையுலகினர் பலர் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory