» செய்திகள் - விளையாட்டு » உலகம்
விரைவில் தீர்ப்பு எதிரொலி: வங்கிகளுக்கு மொத்த தொகையையும் தருவதாக மல்லையா அறிவிப்பு
புதன் 5, டிசம்பர் 2018 10:40:42 AM (IST)
லண்டன் நீதிமன்றத்தில், தீர்ப்பு வெளிவர 5 நாட்களே உள்ள நிலையில், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகை முழுவதும் தந்து விடுவதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பை வரும் 10 ஆம் தேதி அளிக்கப்படும் என நீதிபதி எம்மா ஆர்புத்நாட் தெரிவித்துள்ளார். இதனால், விஜய் மல்லையாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ள சூழலில், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகை முழுவதும் தந்து விடுவதாகவும், தயவு செய்து வங்கிகள் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில் விஜய் மல்லையா கூறியிருப்பதாவது:- " அரசியல்வாதிகளும், ஊடகங்களும், பொதுத்துறை வங்கிகளின் பணத்தை வேண்டும் என்றே திரும்ப செலுத்தாமல் ஓடி விட்டதாக கூக்குரல் இடுகின்றனர். இவை அனைத்தும் தவறானவை. கர்நாடக நீதிமன்றத்தில் நான் பணத்தை செலுத்தி விடுவதாக கூறியதற்கு ஏன், யாரும் அதிகம் பேசவில்லை.
விமான எரிபொருள் விலை அதிகரித்ததால், விமானங்கள் நிதி நெருக்கடியில் சிக்கின. நஷ்டங்கள் அதிகரித்ததால், வங்கி பணம் அங்கு சென்றது. அசல் தொகை 100 சதவீதத்தையும் தந்து விடுகிறேன். தயது செய்து அவற்றை பெற்றுக் கொள்ளுங்கள். இவை மறுக்கப்படுமாயின் ஏன்?” எனவும் கேள்வி எழுப்பி அடுத்தடுத்து டுவிட்டரில் விஜய் மல்லையா பதிவுகளை வெளியிட்டுள்ளார். லண்டன் நீதிமன்றத்தில், தீர்ப்பு வெளிவர 5 நாட்களே உள்ள நிலையில், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தி விடுவதாக விஜய் மல்லையா கூறியிருப்பதாக செய்தி வெளியிட்டதை விமர்சித்து மற்றொரு டுவிட் செய்துள்ள விஜய் மல்லையா, வழக்கமான முட்டாள்தனம் இது, 2016 முதலே நான் பணத்தை திருப்பி செலுத்தி விடுவதாக கூறி வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாஷிங்டனில் அமெரிக்க-சீனா கடைசிச் சுற்று வர்த்தக பேச்சுவார்த்தை
சனி 23, பிப்ரவரி 2019 8:55:05 AM (IST)

இந்தியா தாக்கினால் தக்க பதிலடி கொடுங்கள்: பாக். ராணுவத்துக்கு இம்ரான்கான் உத்தரவு
வெள்ளி 22, பிப்ரவரி 2019 10:17:37 AM (IST)

புல்வாமாவில் தீவிரவாத தாக்குதல் நடத்தியவர்கள் மீது ஐநா நடவடிக்கை: சவுதி அமைச்சர் வலியுறுத்தல்
வியாழன் 21, பிப்ரவரி 2019 5:39:06 PM (IST)

புல்வாமா தாக்குதலை நடத்தியது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புதான் : பர்வேஸ் முஷாரப்
வியாழன் 21, பிப்ரவரி 2019 4:21:41 PM (IST)

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒற்றுமையாக இருந்தால் நன்றாக இருக்கும் : டிரம்ப் அட்வைஸ்
புதன் 20, பிப்ரவரி 2019 11:31:58 AM (IST)

புல்வாமா பயங்கரவாத தாக்குதலால் எங்களுக்கு என்ன பயன்? பாக். பிரதமர் இம்ரான்கான் கேள்வி
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 4:26:49 PM (IST)
