» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சவூதி இளவரசர் உத்தரவின் பேரிலேயே காசோக்கி கொல்லப்பட்டுள்ளார் : சிஐஏ தகவல்

சனி 17, நவம்பர் 2018 11:59:57 AM (IST)



சவூதி பட்டத்து இளவரசர் உத்தரவின் பேரிலேயே காசோக்கி கொல்லப்பட்டுள்ளார் என்று சிஐஏ தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசை விமர்சித்தும் குறிப்பாக அதன் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதி வந்தவர் பத்திரிகையாளர் ஜமால்.துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில், இரு வாரங்களுக்கு முன்னர் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்றவர் மாயமானார்.

இதனைத் தொடர்ந்து  துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்தில் ஜமால் கொல்லப்பட்டதாகவும், இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரையும் துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை துருக்கி வெளியிட்டது. 

இதில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டிய துருக்கி, ஜமாலின் விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு, பின்னர் அவரது தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகவும் புகார்களை அடுக்கியது. ஜமால் கொல்லபட்டதைத் தொடர்ந்து மறுத்து வந்த சவுதி, துருக்கி வெளியிட்ட தொடர் ஆதாரங்களால் அவர் கொல்லப்பட்டதை சவுதி ஒப்புக்கொண்டது. ஆனால், இந்த கொலைக்கும் சவூதி அரேபிய பட்டத்து இளவரசருக்கும் தொடர்பு இல்லை என்று சவூதி அரேபிய அரசு மறுத்து வந்தது. 

இந்த நிலையில், அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ, பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் உத்தரவையடுத்தே கசோக்கி கொல்லப்பட்டுள்ளார் என்ற முடிவுக்கு வந்துள்ளது. பல்வேறு ஆதாரங்கள் அடிப்படையில், முகமம்து பின் சல்மான் தான் கசோக்கியை கொலை செய்ய உத்தரவிட்டதாக, சிஐஏ அதிகாரி கூறியதாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.  அமெரிக்காவுக்கான சவூதி தூதர் காலித், பத்திரிகையாளர் கசோக்கியை, தனது ஆவணங்கள் சிலவற்றை எடுப்பதற்காக இஸ்தான்புல்லில் உள்ள தூதரகம் செல்லுமாறு கேட்டுக்கொண்டதாகவும், சவூதி பட்டத்து இளவரசர் வலியுறுத்தலின் பேரிலேயே காலித் இவ்வாறு நடந்து கொண்டார் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டு உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory