» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அடிப்படை நாகரீகம் கூட இல்லை: பிரான்ஸ் அதிபர் கண்டனம்

வியாழன் 15, நவம்பர் 2018 5:49:30 PM (IST)அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, என்ன பேசுவது என்று அடிப்படை நாகரீகம் கூட இல்லை என பிரான்ஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது.

அமெரிக்க அதிபர் தனது டுவிட்டரில் அடிக்கடி எதாவது ஒரு சர்ச்சையான டுவிட் போட்டு சிக்கிக் கொள்வார். சமீபத்தில் தீபாவளி குறித்து சர்ச்சையாக வாழ்த்து தெரிவித்து பின்னர் அது நீக்கப்பட்டது. தற்போது பாரீஸ் தாக்குதல் நினைவு நாளின்போது ஒரு சர்ச்சை டுவிட்டை போட்டு உள்ளார். இந்த டுவிட் குறித்து பிரான்ஸ் அரசு செய்தி தொடர்பாளர், 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாரீஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக நாங்கள் அஞ்சலி செலுத்தும் நாளில் என்ன பேசுவது என்று கூட தெரியாமல் பேசும் அமெரிக்க அதிபருக்கு, அடிப்படை நாகரீகம் கூட இல்லை என்று சரியான சாட்டையடி கொடுத்துள்ளார்.

பிரான்சின் அரசு செய்தி தொடர்பாளர் கிரிவியக்ஸ், நாங்கள் பாரீசிலும் செயிண்ட்-டெனிசிலும் அநியாயமாக கொல்லப்பட்ட எங்கள் நாட்டவர்கள் 130 பேரை நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம், எனவே ஆங்கிலத்தில் தெளிவாக கூறுகிறேன், அடிப்படை நாகரீகம் இருந்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்றார்.இதற்கிடையில், பல விமர்சனங்களை டுவீட்களாக வெளியிடும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், பிரான்சும் அமெரிக்காவும் ஒருவரை ஒருவர் சரியான விதத்தில் மதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த மேக்ரான், நான் டுவீட்களுக்கு பதிலளிக்க வேண்டும் என பிரான்ஸ் மக்கள் எதிர்பார்க்கவில்லை என்றார். 

ஐரோப்பிய ராணுவம் ஒன்று தேவை என மேக்ரான் அறிவித்ததற்கு, தனது கோபத்தைக் வெளிக்காட்டும் விதத்தில் டிரம்ப், அமெரிக்க ஒயினுக்கு பிரான்ஸ் விதிக்கும் வரிகளைக் குறித்து டுவிட் செய்து இருந்தார். டிரம்பின் டுவீட்டுகள் மோசமானவையாக இருந்ததா என்று பத்திரிகையாளர்கள் கேட்க, நீங்களே உங்கள் கேள்விக்கான பதிலை கூறிவிட்டீர்கள் என்றார் மேக்ரான்.டிரம்ப் அமெரிக்க அரசியல் செய்கிறார் என்று நினைக்கிறேன் என்று கூறிய மேக்ரான், நான் அவரை அமெரிக்க அரசியல் செய்ய விட்டு விடுகிறேன் என்றார். உண்மையில் சொல்லப்போனால், நான் டுவீட்கள் அல்லது கருத்துக்கள் வழியாக அரசியலோ தூதரக பணியோ செய்வதில்லை என்றார் மேக்ரான்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory