» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஸ்பைடர் மேன், அயர்ன் மேன், ஹல்க் உள்ளிட்ட சூப்பர் ஹீரோக்க‌ளை உருவாக்கிய ஸ்டான் லீ காலமானார்

செவ்வாய் 13, நவம்பர் 2018 12:28:47 PM (IST)

ஸ்பைடர் மேன், அயர்ன் மேன், ஹல்க் உள்ளிட்ட சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை உருவாக்கிய  ஸ்டான் லீ காலமானார்.

அமெரிக்காவை சேர்ந்த ஸ்டான் லீ மார்வெல் நிறுவனத்தின் பிதாமகன் என்று அழைக்கப்படுகிறார். ஸ்டான்லி மார்ட்டின் லீபர் என்று இயர்பெயர் கொண்ட இவர் 1922 டிசம்பர் 28ல் பிறந்து 95 வருட நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11.45 மணிக்கு 95 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக ஸ்டான் லீ காலமானார். உலகம் முழுக்க ஹாலிவுட் ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இவரது இழப்பு பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ஸ்பைடர் மேன், அயர்ன் மேன், எக்ஸ் மேன், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், பிளாக் பந்தர், டெட்பூல், அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட உக்கியமான் சூப்பர் ஹீரோக்களை உருவாக்கியவர் ஸ்டான் லீ. தனோஸ் உள்ளிட்ட மிக மோசமான வில்லன் பாத்திரங்களை உருவாக்கியவர் ஸ்டான் லீ. அவரின் மொத்த கனவுதான் மார்வெல் நிறுவனம் என்றால் மிகையாகாது.

இவர் காமிக் புத்தகங்களை கோடிக்கணக்கில் விற்க வைத்து பலவே ஹாலிவுட்டிலும் பெரிய அளவில் தடம் பதித்தார். டிசி படங்களை ஓரம் கட்ட வைத்து, மார்வெலை உலகின் நம்பர் ஒன் காமிக் திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக மாற்றினார். ஸ்பைடர் மேன் டிரையாலஜி, அயர்ன் மேன் டிரையாலஜி, அவென்ஜர்ஸ் பாகங்கள், பென்டாஸ்டிக் 4, எக்ஸ் மேன் பாகங்கள், டெட்பூல் என்று இதுவரை தோல்வியே சந்திக்காத பிதாமகன் இவர். உலகம் முழுக்க ஹாலிவுட் ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இவரின் இழப்பு காமிக் உலக ரசிகர்களை பெரிய வருத்தத்திற்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாக்கி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory