» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வல்லபாய் படேலுக்கு பிரம்மாண்ட சிலை முட்டாள் தனமானது: இங்கிலாந்து எம்.பி விமர்சனம்

புதன் 7, நவம்பர் 2018 11:16:29 AM (IST)இங்கிலாந்திடம் இருந்து நிதியுதவி பெற்ற இந்தியா, சர்தார் வல்லபாய் படேலுக்கு பிரம்மாண்ட சிலையை எழுப்பியிருப்பது, முட்டாள்தனமானது என்று இங்கிலாந்தைச் சேர்ந்த எம்.பி விமர்சனம் செய்துள்ளார்.

குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் திறந்துவைத்தார். 182 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலை தான் உலகிலேயே உயரமான சிலை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இங்கிலாந்தின் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் போன், சர்தார் வல்லபாய் படேலுக்கு பிரம்மாண்ட சிலையை எழுப்பியிருப்பது, முட்டாள் தனமானது என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மகளிர் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட மேம்பாட்டிற்காக கடந்த 5 ஆண்டுகளில் பிரிட்டனிடமிருந்து இந்தியா சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

NairNov 8, 2018 - 07:15:50 PM | Posted IP 202.1*****

Lot of people are dying every day without food in india. This news will not come in Newpapers. if we go hill area in North india, we can see. This is not big issue their. Because they are facing every day in their life. Foolish Modi.

நிஹாNov 8, 2018 - 10:03:54 AM | Posted IP 141.1*****

10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி பெற வேண்டிய நிலையில் இந்த சிலை அவசியம்தானா? பசியால் உரிழப்போர் இந்தியாவில் இன்றளவும் உள்ளனர். காங்கிரசை விட பா.ஜ.க. மிஞ்சிவிடும் போல உள்ளதே.

ஒருவன்Nov 7, 2018 - 01:38:21 PM | Posted IP 141.1*****

சிவப்பா இருப்பவன் பொய் சொல்லமாட்டான் .. அதானே உண்மையா சொல்லிட்டான்..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory