» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜி.எஸ்.டி.யால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்கிறது: உலக வங்கி ஆய்வறிக்கை

திங்கள் 8, அக்டோபர் 2018 11:07:17 AM (IST)



ஜி.எஸ்.டி. அமல் நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்வதாகவும், இது மேலும் வேகமெடுக்கும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.  

தெற்கு ஆசியாவுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை உலக வங்கி வெளியிட்டு உள்ளது. இதில் ஜி.எஸ்.டி. அமல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்வதாகவும், இது மேலும் வேகமெடுக்கும் எனவும் கூறப்பட்டு உள்ளது. பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. அமல் போன்றவற்றால் ஏற்பட்ட தற்காலிக தடங்கல்களில் இருந்து இந்திய பொருளாதாரம் விடுபட்டு இருப்பது தெரிவதாகவும் உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது.

2017-18-ம் நிதியாண்டில் 6.7 சதவீத வளர்ச்சியை எட்டி இருந்ததாகவும், இது சமீபத்திய ஆண்டுகளில் இன்னும் வேகமெடுத்து இருப்பதாகவும் கூறியுள்ள இந்த அறிக்கை, நடப்பு நிதியாண்டில் 7.3 சதவீத வளர்ச்சியை எட்டும் எனவும் கூறியுள்ளது. இது அடுத்த 2 ஆண்டுகளில் 7.5 சதவீத வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்ப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory