» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு விளையாடிகொண்டிருந்த 8 குழந்தைகள் சாவு

சனி 22, செப்டம்பர் 2018 8:08:32 PM (IST)

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 8 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

ஆப்கானிஸ்தான், வடக்கு ஃபர்பாய் மாகாணத்தில் காவல் நிலையம் அருகே குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நிகழ்ந்த குண்டுவெடிப்பில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர். 8 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், ஆறு குழந்தைகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ள்ளதாகவும் ஆஃப்கான் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. 

காவல் நிலையத்தைக் குறிவைத்து தலிபான்கள் நடத்திய இந்த தாக்குதலில் அப்பாவி குழந்தைகள் பலியாகியுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வேறு எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory