» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஷ்யாவிடம் போர் விமானம் கொள்முதல்: இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா முடிவு?

சனி 22, செப்டம்பர் 2018 3:42:08 PM (IST)



ரஷ்யாவிடம் போர் விமானம் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ள இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஷியாவிடமிருந்து எஸ்-400 டிரையம் ரக போர் விமானங்களைக் கொள்முதல் செய்யவுள்ள இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 400 கி.மீட்டர் தொலைவில் வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆள் இல்லாத குட்டி விமானங்களை வழிமறித்துதாக்கி அழிக்கும் திறன் கொண்ட ரஷ்யாவின் எஸ் 400 ரக அதிநவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகளை இந்திய விமானப்படைக்கு கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சீனா மற்றும் பாகிஸ்தான் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன எஸ் 400 ரக ஏவுகணைகளை வாங்க கடந்த சில ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில்,சீன பாதுகாப்பு நிறுவனம் ஒன்று ரஷியாவிடம் இருந்து சுகோய் ரக போர் விமானங்களையும், எஸ்-400 ரக ஏவுகணைகளையும் கொள்முதல் செய்த விவகாரத்தில், எதிரி நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கும் சட்டத்தின் கீழ் அந்த நிறுவனத்தின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. 

இது, ரஷியாவிடமிருந்து எஸ்-400 டிரையம் ரக போர் விமானங்களைக் கொள்முதல் செய்யவுள்ள இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆனால், அண்மையில் அமெரிக்க-இந்திய நாடுகளின் அமைச்சர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ், இந்தப் பொருளாதாரத் தடை முற்றிலும் ரஷியாவுக்கானது. இந்தியா போன்ற நட்பு நாடுகளை இந்தப் பொருளாதாரத் தடை பாதிக்காத வகையில் அமெரிக்காவின் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory