» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வியட்நாம் நாட்டின் அதிபர் டிரான் தாய் குவாங் உடல் நலக் குறைவால் காலமானார்

வெள்ளி 21, செப்டம்பர் 2018 12:53:11 PM (IST)

வியட்நாம் நாட்டின் அதிபர் டிரான் தாய் குவாங் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 61.

வியட்நாம் நாட்டின் அதிபராக குவாங் 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். அதற்கு முன்பு நாட்டின் பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் உள்ளிட்ட பல பதவிகளை அவர் வகித்து வந்தார்.  

உடல் நலக் குறைவு காரணமாக ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டிரான் தாய் குவாங், சிகிச்சை பலனின்றி இன்று காலை 10.05 மணிக்கு உயிரிழந்தார். உலகின் தலைசிறந்த மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டும், அவரது உடல், சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் போனதே மரணத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory