» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை: மோடிக்கு இம்ரான் கான் கடிதம்

வியாழன் 20, செப்டம்பர் 2018 11:40:57 AM (IST)

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என இந்திய பிரதமருக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம் எழுதி உள்ளார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண வேண்டும் என சர்வதேச சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், எல்லையில் அத்துமீறல், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல், பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களின் தாக்குதல்கள் என அடுத்தடுத்து நடந்த அசம்பாவித நிகழ்வுகளால் பேச்சுவார்த்தைகள் முடங்கியது. இரு நாடுகளின் உறவிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. 
 
இந்நிலையில், பாகிஸ்தானின் பிரதமராக சமீபத்தில் பொறுப்பேற்ற இம்ரான் கான், பாகிஸ்தானும் இந்தியாவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் காஷ்மீர் உட்பட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனவும் கூறியிருந்தார்.  இந்நிலையில், பதவியேற்றபோது வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதிய இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து இம்ரான் கான் பதில் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், இந்தியா-பாகிஸ்தான் இடையே தடைபட்ட அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என கூறியுள்ளார். 

இந்த மாத இறுதியில் நியூயார்க்கில் நடைபற உள்ள ஐநா பொதுசபை கூட்டத்தின்போது பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷியும், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜும் சந்தித்து பேசவேண்டும் என்று இம்ரான் கான் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே, ஐநா பொதுசபை கூட்டத்தில் இரு நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் இடையிலான சந்திப்புக்கு வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் இரு நாடுகளிடையே தடைபட்ட பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.


மக்கள் கருத்து

ஒருவன்Sep 21, 2018 - 10:56:32 PM | Posted IP 162.1*****

பாகிஸ்தான் அரசியல் சாக்கடை தீவிரவாத பண்ணிகள் ஒருபோதும் திருந்த போவதில்லை... முட்டாள் மோடியே பண்ணிகளின் பணக்காரர்கள் விருந்துக்காக அங்கு எதுக்கு பிச்சை எடுக்கணும் ??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory