» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் நுழைந்த பூனை

புதன் 19, செப்டம்பர் 2018 6:29:03 PM (IST)

பாகிஸ்தானின் லாகூரில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் திருட்டுத் தனமாக பூனை ஒன்று நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் உள்ள ஜின்னா மருத்துவமனையில், நோயாளிக்கு அறுவைசிகிச்சை செய்ய தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு கொண்டு சென்றுள்ளனர். தொடர்ந்து அந்த நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்ய முற்படும் போது பூனை ஒன்று, அறுவை சிகிச்சைப் பிரிவில் திடீரென நுழைந்துள்ளது. இதையடுத்து, மருத்துவர்களும் செவிலியர்களும் அதைப் பிடிக்கப் படாத பாடு பட்டுள்ளனர். இதனால், நோயாளியை யாரும் பார்க்கததால், அவர் திண்டாடியுள்ளார். பின்னர்ஒரு வழியாக பூனையை அங்கிருந்து விரட்டி விட்டு அறுவை சிகிச்சையை தொடர்ந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Thoothukudi Business Directory