» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்க பாதிரியாரை விடுவிக்காவிட்டால் கடும் நடவடிக்கை: துருக்கியை எச்சரிக்கும் டிரம்ப்

சனி 18, ஆகஸ்ட் 2018 12:42:48 PM (IST)

துருக்கியில் உளவு வேலை பார்த்ததாக, கைது செய்யப்பட்டிருக்கும் அமெரிக்க பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சனை விடுதலை செய்யாவிட்டால், துருக்கி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். 

அமெரிக்க பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் என்பவர், துருக்கியில் உளவு வேலை பார்த்ததாக அவரை கைது செய்து 2 ஆண்டுகளாக சிறைக்காவலில் வைத்துள்ளது துருக்கி அரசு.  ஆண்ட்ரூவை நாடு கடத்தக் கோரிய அமெரிக்காவின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்தது துருக்கி அரசு. எனவே துருக்கி அரசிற்கு பதிலடி கொடுக்க, அமெரிக்க அரசு, துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற உருக்கு மற்றும் அலுமினியம் மீது 2 மடங்கு வரி விதித்தது. இதனால் துருக்கியின் நாணய மதிப்பு சரிந்தது.
 
இதற்கெல்லாம் அஞ்சாத துருக்கி அரசு, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரியை 120 சதவீதமாகவும், மதுபானங்கள் மீதான வரியை 140 சதவீதமாகவும், புகையிலை மீதான வரியை 60 சதவீதமாகவும் உயர்த்தி நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில், அமெரிக்கா மூலம் துருக்கி பல ஆண்டுகளாக பலனடைந்துள்ளது. பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் தேசப்பற்றாளர். அவரை விடுதலை செய்வதற்காக நாங்கள் எதுவும் தர மாட்டோம். அவரை விடுவிக்காவிட்டால் துருக்கி மீதான நடவடிக்கை தொடரும் என துருக்கி அரசுக்கு டிரம்ப் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory