» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஐ.நா.வின் தடையை மீறி வடகொரியாவுடன் வர்த்தகம்: ரஷிய, சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா நடவடிக்கை

வெள்ளி 17, ஆகஸ்ட் 2018 12:51:17 PM (IST)

ஐ.நா.வின் தடையை மீறி வடகொரியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்ட ரஷிய, சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.

வடகொரியா, உலக நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறியும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதிமுறைக்கு மாறாகவும் அணுக்குண்டு சோதனைகளையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வந்தது. இதற்காக வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. 

இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்த பொருளாதார தடைகளை மீறி வடகொரியாவுடன் ரஷிய நிறுவனமும், சீன நிறுவனங்களும் வர்த்தக உறவு கொண்டு இருந்தது அம்பலத்துக்கு வந்து உள்ளது. இதையடுத்து ரஷியாவின் பிராபினட் பீட்டி நிறுவனத்தை அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் கருப்பு பட்டியலில் சேர்த்து பொருளாதார தடை விதித்து நடவடிக்கை எடுத்து உள்ளது. இதேபோன்று சீனாவின் டாலியன் சன் மூன்ஸ்டார் இன்டர்நேஷனல் லாஜிஸ்டிக்கல் டிரேடிங் கம்பெனி, அதன் சிங்கப்பூர் கிளை நிறுவனம் மீதும் அமெரிக்கா நடவடிக்கை எடுத்து இருக்கிறது.

சிங்கப்பூரில் நடந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, வடகொரியா அணு ஆயுத திட்டங்களை முழுமையாக முடிவுக்கு கொண்டு வர சம்மதித்து அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி, வடகொரியா நடந்து கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் தந்து வருகிறது. இந்நிலையில் இப்போது வடகொரியாவுடன் வர்த்தக உறவு கொண்டிருந்த ரஷிய, சீன நிறுவனங்களை அமெரிக்கா கருப்பு பட்டியலில் சேர்த்து பொருளாதார தடை விதித்து இருப்பது, அமெரிக்கா தன் நிலைப்பாட்டில் உறுதியுடன் இருப்பதையே காட்டுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory