» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் சுதந்திர தின விழா : ஜனாதிபதி மம்னூன் ஹூசைன் தேசியக்கொடியை ஏற்றினார்

செவ்வாய் 14, ஆகஸ்ட் 2018 5:41:01 PM (IST)பாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அந்நாட்டு ஜனாதிபதி, மம்னூன் ஹூசைன் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். 

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்தபோது இந்தியாவுக்கு ஒருநாள் முன்னதாக பாகிஸ்தானுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. அதன்படி இன்று அந்நாட்டில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் உள்ள அனைத்து மாகாண தலைநகரங்கள், அரசு அலுவலகங்களில் அந்நாட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. 

நாட்டின் தலைநகரில் 31 குண்டுகள் முழங்கவும், மாகாண தலைநகரங்களில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்கவும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தில் உள்ள ஜின்னா அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில்  அந்நாட்டு ஜனாதிபதி, மம்னூன் ஹூசைன் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தானின் தற்காலிக பிரதமர் நசிருல் மல்க், ராணுவ முப்படை தளபதிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

எல்லையில்,பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இந்திய வீரர்களுடன் இனிப்புகள் பரிமாறிக்கொண்டனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாகிஸ்தான் ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், பாகிஸ்தான் நிதி நெருக்கடி உள்பட அனைத்து சிக்கல்களிலும் இருந்து மீண்டு வரும் என நம்புவதாக தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory