» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கானுக்கு சவுதி அரசர் சல்மான் வாழ்த்து

செவ்வாய் 14, ஆகஸ்ட் 2018 10:56:09 AM (IST)

பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கானுக்கு சவுதி சவுதி அரசர் சல்மான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் இம்ரான் கான் வருகின்ற 18-ம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளார். இவருக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கானுக்கு சவுதி அரசர் சல்மான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதேபோல், இளவரசர் முகமது பின் சல்மானும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதேபோல், ஜப்பான், ஈரான் போன்ற பல்வேறு நாடுகளின் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை இம்ரான் கானுக்கு தெரிவித்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory