» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அயர்லாந்து விமான ஊழியர்கள் வேலை நிறுத்தம் : 5 நாடுகளில் சுமார் 400 விமானங்கள் ரத்து

சனி 11, ஆகஸ்ட் 2018 8:54:18 AM (IST)

அயர்லாந்தை சேர்ந்த ரயனயிர் விமான நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் விமான சேவை பாதிக்கப்பட்டது. 

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த விமான நிறுவன ஊழியர்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் ஜெர்மனி, சுவீடன், அயர்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளில் சுமார் 400 விமானங்களின் சேவை ரத்தானது. 

இதனால் ஏறத்தாழ 50 ஆயிரம் பயணிகள் பயணம் செய்ய முடியாமல் தவித்தனர். இந்நிலையில், ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது என்றும், 85 சதவீத விமானங்கள் இன்று (சனிக்கிழமை) வழக்கம் போல இயங்கத் தொடங்கி விடும் என்றும் ரயனயிர் நிறுவனம் அறிவித்து உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory