» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கேரளாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம்: குடிமக்களுக்கு அமெரிக்கா வேண்டுகோள்

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 12:01:06 PM (IST)

கேரளாவுக்கு செல்ல வேண்டாம் என்று தங்கள் நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

கேரளாவில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால், அம்மாநிலத்தில் உள்ள பெரும்பாலான வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால், தங்கள் நாட்டு சுற்றுலாப்பயணிகள் கேரளாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. 

நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை முற்றிலும் அமெரிக்க பயணிகள் தவிர்க்க வேண்டும் என்று  அந்நாட்டு வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள கேரளாவில், கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கேரளாவில் உள்ள அணைகள் பெரும்பாலானவை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அனைத்து அணைகளிலும் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory