» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்கா மீதான நம்பிக்கையை உலக நாடுகள் இழந்துவிட்டது: ஈரான் அமைச்சர் காட்டம்

புதன் 8, ஆகஸ்ட் 2018 4:34:26 PM (IST)

அமெரிக்காவின் மீதான நம்பிக்கையை உலக நாடுகள் இழந்துவிட்டது என்பதால் பேச்சுவார்த்தை என்பது கடினம் என ஈரான் கூறியுள்ளது.

அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை 2015-ம் ஆண்டு வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா ஆகியவற்றுடன் ஈரான் செய்துகொண்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அண்மையில் விலகிக்கொண்ட அமெரிக்கா, ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இது ஈரானின் வளர்ச்சிக்கும், அணு ஆயுதம் தயாரிப்பதற்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து இரு நாடுகள் இடையேயும் மோதலான போக்கு நீடிக்கிறது. 

இதனையடுத்து பேச்சுவார்த்தையை மேற்கொள்ள தயாரென டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டார். ஆனால் ஈரான் நிராகரித்து வருகிறது. இது தொடர்பாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவத் ஜாரீப் பேசுகையில், ஒழுங்கற்ற முடிவுகளால் அமெரிக்காவின் மீதான நம்பிக்கையை உலக நாடுகள் இழந்துவிட்டது. இதன்பின்னர் அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை என்பது மிகவும் கடினமானது. பேச்சுவார்த்தை தொடர்பாக இப்போது யோசிக்கப்படுகிறது, அவர்களை எப்படி நாங்கள் நம்ப முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 


மக்கள் கருத்து

HumanAug 9, 2018 - 01:30:49 PM | Posted IP 162.1*****

ஈரான் ஒரு தீவிரவாத நாடு, அதன் வேலை எல்லாம் ஹமாஸ், ஹெஸ்புல்லா, ஐஸ் போன்ற தீவிரவாதிகளுக்கு ஆயுதம், பணம் வழங்கும் நாடு. நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory