» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தான் பிரதமர் வேட்பாளராக இம்ரான்கான் அதிகாரபூர்வமாக தேர்வு: 14ம் தேதி பதவியேற்பு

செவ்வாய் 7, ஆகஸ்ட் 2018 11:46:44 AM (IST)

பாகிஸ்தானின் பிரதமர் வேட்பாளராக இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சி நாடாளுமன்ற கமிட்டி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த தேர்தலில் ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரரான இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. இதைத்தொடர்ந்து கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைக்கும் முயற்சியில் இம்ரான்கான் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் கட்சியின் நாடாளுமன்ற கமிட்டியிடம் இம்ரான்கான் பிரதமர் பதவிக்கு தன்னை தேர்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்தார். பாகிஸ்தானில் உள்ள ஒரு ஓட்டலில் கட்சியின் நாடாளுமன்ற கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் உயர்மட்ட தலைவர்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கட்சியின் மூத்த துணை தலைவரான ஷா முகமூத் குரேசி மற்றும் தலைவர்கள் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில் கட்சியின் பிரதமர் வேட்பாளராக இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டதாக நாடாளுமன்ற கமிட்டி அதிகாரபூர்வமாக அறிவித்தது. தன்னை பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்ததற்காக நாடாளுமன்ற கமிட்டிக்கு இம்ரான்கான் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

முன்னதாக பாங்கியாலாவில் உள்ள தனது வீட்டுக்கு பிரதமருக்குரிய பாதுகாப்பு வாகனங்களுடன் இம்ரான்கான் சென்றது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் சுதந்திர தினமான வரும் 14-ம் தேதி இம்ரான்கான் பிரதமராக பதவி ஏற்க இருப்பதாக அங்குள்ள வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின், ‘பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ்’ கட்சி பஞ்சாப் மாகாண முன்னாள் முதல்வர் ஷெபாஷ் ஷெரீப்பை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவித்து உள்ளது. 66 வயதான இவர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory