» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தோனேஷியா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: உயிரிழப்பு 91 ஆக உயர்வு

திங்கள் 6, ஆகஸ்ட் 2018 1:39:59 PM (IST)

இந்தோனேஷியாவின் லோம்போக் தீவில் நிகழ்ந்து சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவின் லோம்போக் தீவின் முக்கிய நகரான மேட்டரமில் உள்ள கட்டடங்கள் இந்த நிலநடுக்கத்தால் பயங்கரமாக குலுங்கின. இதையடுத்து, அங்கு வசித்தவர்கள் உயிருக்கு பயந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டமெடுத்து சாலைகளில் தஞ்சமடைந்தனர்.இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மிதமாக 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து சுமார் 24 முறை நில அதிர்வுகள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு பிறகு திரும்பப் பெறப்பட்டது. துவிகோரிடா, கர்னாவதி ஆகிய இரு கிராமங்களில் 13 செ.மீ. அளவுக்கு கடல்நீர் ஊருக்குள் புகுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கம் பாலி தீவிலும் உணரப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory