» செய்திகள் - விளையாட்டு » உலகம்
தேர்தலில் ஓட்டு வாங்க தன்னை சிலுவையில் ஏற்ற பார்க்கிறார்கள்: விஜய் மல்லையா குற்றச்சாட்டு
திங்கள் 9, ஜூலை 2018 5:20:09 PM (IST)
இந்தியாவில் எதிர்வரும் தேர்தலில் ஓட்டு வாங்க தன்னை சிலுவையில் ஏற்ற பார்க்கிறார்கள் என விஜய் மல்லையா குற்றம்சாட்டியுள்ளார்.

அவரை இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய லண்டன் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் தனது சொத்துக்களை தர தயார் என்று விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். ஆனால் லண்டனில் இருக்க கூடிய சொத்துக்கள் தன்னுடையது அல்ல என்றும், அவை தன் தாயார் மற்றும் குழந்தைகளின் சொத்து என்று விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
தன்னுடைய பெயரில் சில கார்களும், நகைகள் மட்டுமே இருப்பதாகவும், நேரம் அறிவித்துவிட்டு, வீட்டுக்கு வந்தால், அதை தர தான் தயாராக இருப்பதாகவும் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். இந்தியாவை பொறுத்தவரை தாம் ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியர் என்று தெரிவித்துள்ள விஜய் மல்லையா, இந்தியாவில் எதிர்வரும் தேர்தலில் ஓட்டு வாங்க தன்னை சிலுவையில் ஏற்ற பார்க்கிறார்கள் என்று விஜய் மல்லையா குற்றம்சாட்டியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புல்வாமா தாக்குல் எதிரொலி: சவுதி இளவரசர் தயக்கம்? நிதியுதவி பெற பாகிஸ்தானுக்கு சிக்கல்!!
சனி 16, பிப்ரவரி 2019 5:41:48 PM (IST)

விதிமுறைகளை மீறும் வீடியோக்கள் மீது நடவடிக்கை; இந்தியாவுக்காக பிரத்யேக அதிகாரி: டிக் டாக் உறுதி
சனி 16, பிப்ரவரி 2019 5:16:01 PM (IST)

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பதிலடி: இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு
சனி 16, பிப்ரவரி 2019 12:32:49 PM (IST)

புல்வமா தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்: ரஷ்யா
வெள்ளி 15, பிப்ரவரி 2019 3:58:48 PM (IST)

பாகிஸ்தான் செல்வதை அமெரிக்கர்கள் கட்டாயமாக தவிர்க்க வேண்டும்: டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை
வெள்ளி 15, பிப்ரவரி 2019 12:24:07 PM (IST)

பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்: பாக்.கிற்கு அமெரிக்கா எச்சரிக்கை
வெள்ளி 15, பிப்ரவரி 2019 11:01:55 AM (IST)

நிஹாJul 11, 2018 - 10:23:33 AM | Posted IP 162.1*****